மேலும் செய்திகள்
தண்ணீரின்றி வறண்ட ஆனைக்குட்டம் அணை
26-Nov-2024
திருப்பூர்; ''பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட(பி.ஏ.பி.,) தொகுப்பில் இருந்து, திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உப்பாறு அணைக்கு இம்மாதம் ஐந்து நாட்கள் உயிர் நீர் வழங்கவேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம், நேற்று இதுதொடர்பாக விவசாயிகள் மனு அளித்தனர். பின், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது:உப்பாறு அணை பகுதி களில் போதிய மழை பெய்யவில்லை. பி.ஏ.பி., தொகுப்பில், கடந்த நவ., மாதம், 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, அணையில், மொத்தம் 24 அடியில், 14 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அடுத்ததாக வரும் ஜன., 10க்குப் பின்னரே திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.அரசூர் ஷட்டரிலிருந்து உப்பாறு அணை வரை, 43 கி.மீ., துாரத்தில், 18 தடுப்பணைகள் உள்ளன. வழக்கமாக தடுப்பணைகள் நிரம்பி, உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்படும். தற்போது அனைத்து தடுப்பணைகளும் நிரம்பியுள்ளன. நீர் வரத்து அதிகரிப்பால், திருமூர்த்தி அணை அடுத்த ஒரு வாரத்துக்குள் நிரம்பிவிடும். பி.ஏ.பி., தொகுப்பில் உப்பாறு அணைக்கு இம்மாதம், ஐந்து நாட்களுக்கு உயிர்நீர் திறந்தால், விரைவில் அணை நிரம்பிவிடும்; ஆழ்துளை கிணறுகள், கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
26-Nov-2024