உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உரம் தயாரிப்ப ை ஊக்குவிக்க வலியுறுத்தல் ஊராட்சிகளில் ஊக்குவிக்க வலியுறுத்தல்

உரம் தயாரிப்ப ை ஊக்குவிக்க வலியுறுத்தல் ஊராட்சிகளில் ஊக்குவிக்க வலியுறுத்தல்

உடுமலை; கிராமங்களின் துாய்மையை மேம்படுத்த, திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், குப்பைக்கழிவுகளிலிருந்து உரம் தயாரித்து விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.உடுமலை ஒன்றியத்தில், பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சிகள், முதற்கட்டமாக கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும, துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் பணிகள் நடக்கிறது. அதன் பின், அக்கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பது தான் திட்டத்தின் முக்கிய நோக்கம்.ஆனால், இப்பணிகள் துவக்கத்தில் மட்டுமே முழுமையாக செயல்படுத்தப்பட்டது. சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரித்து, உரக்குழிகளில் கொட்ட வேண்டும்.தொடர்ந்து, குப்பைக்கழிவுகளிலிருந்து, உரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொண்ணுாறு சதவீத கிராமங்களில், இந்த குடில்கள் எந்த பயன்பாடும் இல்லாமல் காலியாக உள்ளன.சில மாதங்களுக்கு முன்பு, குறிப்பிட்ட ஊராட்சிகளில் உரக்குடில்கள் புதுப்பிக்கப்பட்டன. இருப்பினும் உரம் தயாரிக்கும் பணிகள் முழுமையாக நடப்பதில்லை. ஊராட்சிகளில் உரம் தயாரிப்பதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.கழிவுகள் வாயிலாக உரம் தயாரிப்பது மற்றும் மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை