ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.தி.மு.க., திருப்பூர் வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கலெக்டரிடம் அளித்த மனு விவரம்:திருப்பூர் நகரப் பகுதியாக உள்ள அவிநாசி ரோட்டில், புஷ்பா சந்திப்பு முதல் தண்ணீர் பந்தல் வரை ரோட்டின் இரு புறங்களிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுதவிர, பெரும்பாலான நேரங்களில் தள்ளு வண்டிகள், பிளாட்பாரக் கடைகள் அதிகளவில் இந்த ரோட்டில் அமைக்கப்படுகிறது.பரபரப்பான வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த பிரதான ரோட்டில் இது போல் உள்ள ஆக்கிரமிப்புகள் பெரும் போக்குவரத்து நெருக்கடியையும், பொதுமக்களுக்கு அவதியையும் ஏற்படுத்துகிறது.இது போன்ற ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.