மேலும் செய்திகள்
சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
27-May-2025
உடுமலை; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வைகாசி விசாக திருவிழா நடந்தது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி வள்ளி தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் பால், பன்னீர், திருநீறு உட்பட பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ஆரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வள்ளி தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளின் வெள்ளித்தேர் திருவீதி உலா நடந்தது.
27-May-2025