வளர்மதி ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட்
திருப்பூர் : திருப்பூர் வளர்மதி கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.வளர்மதி கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் மாநகராட்சி பகுதியில் ரேஷன் கடைகள் உள்ளன. இதில் இந்திரா வீதியில் உள்ள ரேஷன் கடையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.அப்போது ரேஷன் கடையில் 9,250 ரூபாய் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை ஊழியர் பரத் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.