உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேன்   மோதி விபத்து மின் கம்பம் சேதம்

வேன்   மோதி விபத்து மின் கம்பம் சேதம்

திருப்பூர்; திருப்பூர், காமராஜ் ரோடு மேம்பாலத்தில் சரக்கு வேன் மோதியதில் மின் விளக்கு கம்பம் சேதமானது.திருப்பூர், காமராஜ் ரோட்டில் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே உயர் மட்ட மேம்பாலம் உள்ளது. நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் இந்த பாலம் வழியாக ஒரு பார்சல் வேன் சென்றது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாலத்தின் மீதிருந்த மின் கம்பம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மின் கம்பம் முறிந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் மீது சரிந்து, ரோட்டோரம் இருந்த கட்டடம் மீது சாய்ந்து நின்றது.தகவல் அறிந்து சென்ற தெற்கு போலீசார், மின் கம்பம் மீது மோதிய வேனை அப்புறப்படுத்தினர். மின் வாரியத்தினர் வரவழைக்கப்பட்டு, முறிந்த மின் கம்பம் அப்புறப்படுத்தப்பட்டது.இதனால், அப்பகுதியில் நேற்று அதிகாலை நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது. மீட்பு பணி காரணமாக, காமராஜ் ரோட்டில், வாகனங்கள் மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி