மேலும் செய்திகள்
டூ வீலர் மோதியதில் மின் ஊழியர் பலி
02-Jul-2025
அவிநாசி:அவிநாசியில் கார் மோதி சிறுவன் பலியான வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கங்கவர் வீதியை சேர்ந்த கணேசன் மகன் ஹரிஷ், 13; ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தாலுகா அலுவலகம் முன், சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஹரிஷ் பலியானார். காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலர் தங்கவேலை அவிநாசி போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
02-Jul-2025