வி.சி.க., ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; மத்திய, மாநில அரசுகள் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்தர், பாசறை மாநில துணை செயலாளர் துரைவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.