உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே கேட் பகுதியில் வாகனங்கள் முந்த முடியாது

ரயில்வே கேட் பகுதியில் வாகனங்கள் முந்த முடியாது

திருப்பூர்,; திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், இரண்டாவது ரயில்வே கேட் உள்ளது. நகரின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேட்டை கடந்து தினமும் பயணிக்கிறது. ரயில்வே மேம்பாலம் பகுதியில் நெரிசல் ஏற்படும் என்பதால், கொங்கு மெயின் ரோடு, புது ராமகிருஷ்ணாபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் இருந்து கனரக வாகனங்கள் கேட்டை கடந்து செல்ல வருகிறது. 'பீக்ஹவர்ஸ்' தருணங்களில், இரண்டு திசைகளில் இருந்து கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் நுழைந்து, கடந்து செல்ல முற்படும் போது, நெரிசல் ஏற்படுகிறது. ரயில் வருவது குறித்து ஒலி எழுப்பி, கேட்டை மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், வாகனங்கள் உடனடியாக நகர்ந்து செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கிறது. ஒரு கேட்கீப்பர் அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கவும் முடிவதில்லை. இந்த சிரமங்களை தவிர்க்க, ரயில்வே கேட் டில் அடுத்தடுத்து வாகனங்கள் முந்தி, எதிர்எதிரே முன்னேற முயல்வதை தடுக்க, தண்டவாளங்களை கொண்டு தடுப்பு கட்டைகள் நடப்பட்டுள்ளது. இதனால், அகலமான கனரக வாகனம் ஒன்று செல்லும் போது, மற்றொரு வாகனமும் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை