உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலவன் மெட்ரிக் பள்ளி அசத்தல்

வேலவன் மெட்ரிக் பள்ளி அசத்தல்

திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய குழு போட்டி, தடகளத்தில், பலவஞ்சி பாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அசத்தினர்.இப்பள்ளி மாணவர்கள், 19 வயது, 100 மீ., 400 மீ., ஓட்டத்தில் மாணவர் பிரின்ஸ். டேபிள் டென்னிஸ்ஸில் தர்ஷன்ஹரி, நித்தீஸ்வர், 14 வயது பிரிவு, நீளம் தாண்டுதலில், சத்யஜித், 80மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், பூர்விகாகிருஷ்ணன், ஈட்டிஎறிதலில் தீபிகா வெற்றி பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.மாவட்ட ஜூனியர் தடகள போட்டி, டீ பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில், மாணவி தீபிகா பங்கேற்று, ஈட்டிஎறிதலில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மற்றும் உடற்கல்விஆசிரியர்களை பள்ளி முதல்வர் அரவிந்த் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை