உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யா மந்திர் பள்ளி முப்பெரும் விழா 

வித்யா மந்திர் பள்ளி முப்பெரும் விழா 

திருப்பூர், : திருப்பூர், அவிநாசி ரோடு, ஆஷர் நகரிலுள்ள வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா, கலை விழா, பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.பட்டிமன்ற நடுவர் கவிநிலவான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி முதல்வர் புஷ்பலதா வரவேற்றார். பள்ளியின் செயலாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குனர் காயத்ரிவிவேகானந்தன் சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் கவிநிலவான், 'விவேகானந்தர் வீரமும், அறிவும் பல கலைகளில் தேர்ச்சி,' எனும் தலைப்பில் பேசினார். விவேகானந்தரின் 162 வது ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட இரண்டடி உயர விவேகானந்தர் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.கலைகளின் பயிற்சியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோரும் பள்ளியில் பொங்கல் வைத்தனர்.பள்ளி துணை முதல்வர் சித்ராதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !