கிராம உதவியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
உடுமலை ; உடுமலையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்து, சங்கத்தின் கோரிக்கைகளை குறித்து, விரிவாக பேசினார். கிராம உதவியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பலன்களை காலதாமதமாக வழங்கும் உடுமலை தாலுகா நிர்வாகத்தை கண்டிப்பது, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை இந்த அரசு படிப்படியாக பறித்து வருகிறது. இதை சங்கத்தின் சார்பில் கண்டித்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவராக திலீப், மாவட்ட செயலாளராக காந்திராஜ், இணை செயலாளர் பிரேமா, மாவட்ட பொருளாளராக நாகராஜ், உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.