உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் மனு

உடுமலை;கோவிலுக்கு மின் இணைப்பு பெற, தடையின்மை சான்று வழங்கக்கோரி, எரிசனம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் மனு கொடுத்தனர். உடுமலை ஒன்றியம், எரிசனம்பட்டியில், காளியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் வழிபடும் இக்கோவிலுக்கு மின் இணைப்பு இல்லை. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கிய மனு: எரிசனம்பட்டி கிராம ஊர்க்கட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு பெற, ஊராட்சி நிர்வாகத்தினர், உடனடியாக தடையின்மை சான்று வழங்க வேண்டும். பல முறை நேரடியாக வலியுறுத்தியும் சான்று வழங்கப்படவில்லை. கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் வகையில், உடனடியாக தடையின்மை சான்று வழங்க வேண்டும். கிராம சபையிலும் இக்கோரிக்கை குறித்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி