உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குண்டும், குழியுமாக ரோடு கிராம மக்கள் வேதனை

குண்டும், குழியுமாக ரோடு கிராம மக்கள் வேதனை

உடுமலை, ; சுண்டக்காம்பாளையம் கிராம ரோடு முற்றிலுமாக சிதிலமடைந்து, குண்டும், குழியுமாக மாறியிருப்பதால், கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சுண்டக்காம்பாளையம். இக்கிராம மக்கள் உடுமலையில் இருந்து ஒட்டுக்குளம் வழியாக செல்லும் பாதையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதில், கிராம மழை நீர் ஓடையில் இருந்து குடியிருப்பு வழியாக செல்லும் தார்ரோடு நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், சிதிலமடைந்து, குண்டும், குழியுமாக மாறி விட்டது.நீண்ட காலமாக ரோடு பரிதாப நிலையிலேயே இருப்பதால், கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். உடுமலை ஒன்றிய நிர்வாகம் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என, கிராம மக்கள் தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி