உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி பயிரில் வைரஸ் தாக்குதல்: தொடர் நஷ்டத்தில் விவசாயிகள்

காய்கறி பயிரில் வைரஸ் தாக்குதல்: தொடர் நஷ்டத்தில் விவசாயிகள்

உடுமலை: ''காய்கறி பயிர்களில் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த, விஞ்ஞானிகள் வாயிலாக , விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும்'' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனன், கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் அளித்துள்ள மனு: திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக, சின்னவெங்காயம், மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டை, புடலை, கீரை வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி பயிர் சாகுபடிக்கு, வீரிய ஒட்டு ரக விதைகளையே பயன்படுத்தி வருகின்றனர். காய்கறி பயிர்களில் கடும் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு, போதிய உற்பத்தியின்றி விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்துவருகின்றனர். வேளாண் அதிகாரிகள், உரியவகையில் ஆய்வு மேற்கொண்டு, விஞ்ஞானிகள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை