உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளி அலுவலகம் திறப்பு விழா

விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளி அலுவலகம் திறப்பு விழா

திருப்பூர்; திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மூலம் விவேகானந்தா சேவா அறக்கட்டளை கல்விச்சேவையாற்றி வருகிறது.திருப்பூர், பல்லடம் சாலை, கணபதிபாளையத்தில் 'விவேகானந்தா குளோபல் அகாடமி' என்ற சி.பி.எஸ்.இ., பள்ளியை புதிதாக விரைவில் துவங்குகிறது.இதற்கான பள்ளி அலுவலகக் கட்டட திறப்பு விழா நடந்தது. இணையதளம் வழியாக எல்.கே.ஜி., முதல் ஆறாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை முன்பதிவும் நடந்தது. திறப்பு விழாவில் பள்ளி நிர்வாகிகள், மூத்த முதல்வர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ