காத்திருப்பு போராட்டம்; குடியிருப்பாளர்கள் முடிவு
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 55வது வார்டு, பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதி ஊர் கூட்டம் நடந்தது.''பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 192 குடும்பங்கள் வசிக்கின்றன. வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். நில சீர்திருத்த ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை.முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை.வரும் 27ல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்'' என்று முடிவெடுக்கப்பட்டது.