ஏ றுபோல் நட
இந்தாண்டு, சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., பிரிவு சார்பில் பங்கேற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே அரசுக்கல்லுாரி மாணவன் என்ற பெருமையை பெற்ற சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவன் ெஷல்வின் கூறியதாவது;ஆண்டுதோறும் டில்லி மற்றும் சென்னையில் கவர்னர், முதல்வர், முப்படைகளின் தலைவர்கள் என பலரும் பங்கேற்கும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடக்கிறது.சென்னையில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இளம் வயதில் இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது. 'அந்த அணிவகுப்பை 'வீரர்களின் பாதை' என்று தான் சொல்கின்றனர். ராணுவத்துக்கு இணையான சீருடை அணிந்து, வீறுநடை போடும் போது, பாரதியின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது; கம்பீரமாக உணர்ந்தேன்.