உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு

நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு

உடுமலை ; கிராமங்களிலுள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், பாதுகாப்புக்காக, ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பியுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாமல், முன்பு, நீர்நிலைகளில் குளிக்க சென்றவர்கள் இறந்த சம்பவங்கள் நடந்தது.இதையடுத்து, மழைக்காலத்திலும், நீர்நிலைகளில் நிரம்பியிருக்கும் போது, ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்; நீர்நிலைகளில் குளிப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள கிராம குளங்களின் கரைகளில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில், 'ஆழமான, ஆபத்தான பகுதியில், பொதுமக்கள், குளிக்கவோ மற்றும் நீரில் இறங்கவோ கூடாது. மீறினால், ஊராட்சியால், அபராதம் விதிக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை