உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எச்சரிக்கை வாசகம் இல்லை கடைகளுக்கு அபராதம்

எச்சரிக்கை வாசகம் இல்லை கடைகளுக்கு அபராதம்

திருப்பூர்: எச்சரிக்கை வாசகம் அச்சிடாத சிகரெட் பாக்கெட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவினர், மாநகர போலீசாருடன் இணைந்து கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கே.வி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகளில், சில வகை சிகரெட் பாக்கெட்களில், எச்சரிக்கை வாசகம் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அவ்வகையில், 25 கடைகளில் நடந்த சோதனையில் 11 கடைகளில் இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது.அந்த கடைகளுக்கு மொத்தம் 3,100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிகரெட் பாக்கெட் மற்றும் அதன் விளம்பரங்களில் அரசு உத்தரவிட்ட எச்சரிக்கை வாசகம் அச்சிடுவது கட்டாயம். இதை மீறும் கடைகள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. இது குறித்தும் உரிய அறிவிப்பு கடைகளில் வைக்க வேண்டும் என, சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி