கிளை கால்வாயில் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு
உடுமலை, ; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில், மார்ச் 13ல், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த 10ம் தேதி நிறைவு செய்யப்பட்டது.மூன்றாம் சுற்றுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாயில், கடந்த 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பிரதான கால்வாயில் இருந்து, தற்போது ஒவ்வொரு கிளை கால்வாயாக மூன்றாம் சுற்று தண்ணீர் திறக்கப்படுகிறது.நேற்றுமுன்தினம் பூலாங்கிணறு கிளை கால்வாய்க்கு, சர்க்கார்புதுார் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் மூன்றாம் மண்டலத்தில், 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.போதிய மழை இல்லாத நிலையில், பாசனம் துவங்கியுள்ளதால், கடைமடை வரை பொதுப்பணித்துறையினர் ரோந்து சென்று, நீர் திருட்டை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைப்பயிர்களுக்கு பாசன நீர் பற்றாக்குறை ஏற்படும் என, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.