உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறப்பு

பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறப்பு

பல்லடம் : உடுமலை, திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., திட்டம் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மூன்றாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஜன., 1ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், வேறு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மூன்றாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறப்பது தாமதமானது.இதனால், பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு வருவதாக கூறி, பல்லடம் பகுதி பாசன விவசாயிகள், சமீபத்தில், பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, நாளை, (ஜன., 29ம் தேதி) மூன்றாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:பி.ஏ.பி., தண்ணீரை நம்பி பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மூன்றாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தான், ஏராளமான விவசாயிகள் தக்காளி, வெங்காயம் என, பயிர் சாகுபடி செய்து காத்திருக்கின்றனர்.உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படாததால், அவை காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டு வருகிறது.பாசன விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல், அரசியல் ஆதாயத்துக்காக, பி.ஏ.பி., தண்ணீர், உப்பாறு, பூளவாடி மற்றும் வட்டமலை பகுதிகளுக்கு திறந்து விடப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெளிவு படுத்தி உள்ளோம். அதிகாரிகள் உறுதி அளித்தபடி, நாளை, மூன்றாம் மண்டலத்துக்கான தண்ணீர் திறந்து விடப்படவில்லை எனில், பாசன விவசாயிகள் ஒன்று திரண்டு, பல்லடம் பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ