உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதர் மண்டிய நிலையில் நீர் வரத்து கால்வாய்கள்

புதர் மண்டிய நிலையில் நீர் வரத்து கால்வாய்கள்

உடுமலை, ; செட்டிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாயில் புதர்களை அகற்றி, பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனத்திட்ட குளங்கள் வாயிலாக நேரடியாக, 2,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இக்குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பின்னர், ஒவ்வொரு குளமாக நீர் நிரப்புவதுடன், நேரடியாகவும் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.இவ்வாறு, ஒரு குளத்தில் இருந்து, அருகிலுள்ள குளத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள், நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது.இதனால், பல இடங்களில், கரைகள் சிதிலமடைந்து, கான்கிரீட் காணாமல் போய், மண் கரையாக காணப்படுகிறது.மேலும், பாசன கால இடைவெளியில், புதர் மண்டி கால்வாய் காணாமல் போயுள்ளது. தளி அருகிலுள்ள, தினைக்குளத்தில் இருந்து பள்ளபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, செட்டிக்குளத்துக்கு வரும் கால்வாயும் புதர் மண்டி, பராமரிப்பு இல்லாமல் உள்ளது.அணையிலிருந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்கும் முன் கால்வாயில், புதர்களை அகற்றி, அடிப்படை பராமரிப்பு பணிகளை, பாசன சங்கங்கள் வாயிலாக பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை