மேலும் செய்திகள்
அதிகரித்த கொசுத்தொல்லை: ஊராட்சிகள் அலட்சியம்
13-Aug-2024
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், சிறப்புத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்பாடு இல்லாமல், பூட்டப்பட்டுள்ள நிலையில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது மக்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 61 ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.பல்வேறு காரணங்களால், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, உள்ளூர் நீராதாரங்களான, போர்வெல் மற்றும் பொதுக்கிணற்றில் கிடைக்கும் தண்ணீரை, ஊராட்சி நிர்வாகத்தினர் மக்களுக்கு வினியோகிப்பது வழக்கம்.இவ்வாறு, உள்ளூர் நீராதாரங்களில் பெறப்படும் தண்ணீரின் தரத்தால், சில பாதிப்புகள் ஏற்பட்டதால், குடிநீரை சுத்திகரித்து வினியோகிக்க கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, சிறப்புத்திட்டத்தின் கீழ், சில ஊராட்சிகளில், எதிர் சவ்வூடு பரவல் முறையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கான மின் இணைப்பு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், 8 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்பட்டது.உடுமலை ஒன்றியத்தில், மானுப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. இதே போல், குடிமங்கலம் ஒன்றியத்திலும், சில சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்பாடு இல்லாமல் வீணாகக்கிடக்கிறது.கடந்த சில மாதங்களாக, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பற்றாக்குறையாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது; இதனால், உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, போர்வெல்களில் தண்ணீர் குறைந்துள்ளதால், தண்ணீரின் தரமும் மாறியுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாததால், தண்ணீரை சுத்திகரிக்காமல், நேரடியாக வினியோகிப்பதால், பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.இரு ஒன்றியங்களிலும் காட்சிப்பொருளாக உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பல லட்சம் ரூபாய் அரசு நிதியை வீணடிக்கும் வகையில், செயல்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவும் செய்வதில்லை
கிராமங்களில் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் முன், முறையான பரிசோதனை செய்வது அவசியம்.குறிப்பிட்ட இடைவெளியில், இந்த பரிசோதனையை மேற்கொள்ள, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஊராட்சி பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, களநீர் பரிசோதனை பெட்டியும் வழங்கப்பட்டது.ஆனால், இந்த பெட்டியை பயன்படுத்தி, எவ்வித பரிசோதனையும் மேற்கொள்வதில்லை. இதனால், மழைக்காலங்களில், தரமற்ற குடிநீரால் பல்வேறு பாதிப்புகளை கிராம மக்கள் சந்தித்து வருகின்றனர்.ஊராட்சிகளின் இந்த அலட்சிய போக்கு குறித்தும், ஒன்றிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Aug-2024