உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உளுந்து, பசிப்பயறு, தட்டை விதைகள் இருப்பு இருக்கு!

உளுந்து, பசிப்பயறு, தட்டை விதைகள் இருப்பு இருக்கு!

உடுமலை: நோய் எதிர்ப்பு சக்தி உள்ள 'வம்பன்-8' உளுந்து ரக விதைகள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, குடிமங்கலம் வட்டார வேளாண்துறையினர் தெரிவித்தனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், தைப்பட்ட சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த சீசனுக்கு தேவையான உளுந்து விதைகள் மானியத்தில் வினியோகிக்க வட்டார வேளாண் துறையால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தா அறிக்கை:உளுந்து 'வம்பன்-8' ரகம் அனைத்து பருவங்களிலும் பயிரிட உகந்தது. ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சி அடையும். காய்கள் வெடித்து உதிராது. மானாவாரியாக ஏக்கருக்கு, 348 கிலோவும், இறவை பாசனத்தில், 395 கிலோவும் மகசூல் கிடைக்கும்.பாசிப்பயறு வம்பன்-5 ரகமானது, மானாவாரியாக ஏக்கருக்கு 352 கிலோ; இறவையாக, 390 கிலோ மகசூல் கிடைக்கும். தட்டை பயறு வம்பன்-3 ரகமானது, மானாவாரியாக ஏக்கருக்கு, 405; இறவையாக 459 கிலோ மகசூல் தரும். இவ்விதைகள், வைரஸ் நோய்க்கும், காய் துளைப்பானுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.குடிமங்கலம் வட்டாரத்தில், விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விதைகளாகும். இவ்விதைகளை மானிய விலையில் வினியோகிக்க வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்கள் மானிய விலையில் வினியோகிக்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ