உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி எஸ்.சி.வி., பள்ளியில் செய்ந்நன்றி அறிவோம்

தி எஸ்.சி.வி., பள்ளியில் செய்ந்நன்றி அறிவோம்

திருப்பூர்; திருப்பூர் கணியாம்பூண்டி தி எஸ்.சி.வி., சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் இணைந்து 'செய்ந்நன்றி அறிவோம்' சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர். முதன்மை விருந்தினர்களாக பள்ளி பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள், பள்ளி பாதுகாவலர்கள், தோட்டக்காரர்கள், துப்புரவுப்பணியாளர்கள், சிற்றுண்டி ஊழியர்கள், ஆயாக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களது அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கு மாணவ, மாணவியர் உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்தனர். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து மரக்கன்றை மாணவ, மாணவியர் பரிசாக வழங்கியது ஊழியர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது; ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்நிகழ்ச்சியை பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். இயற்பியல் ஆசிரியர் பாலமுரளி நெறிப்படுத்தினார். தாளாளர் முருகசாமி, பாராட்டி மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ