மாரியம்மன் கோவிலில் 21ல் திருக்கல்யாணம்
உடுமலை; சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வரும் 21ம் தேதி நடக்கிறது.சின்னவாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்று இரவு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடக்கிறது.திருவிழாவையொட்டி, சக்தி அழைத்தல் நிகழ்வு வரும் 20ம் தேதி நடக்கிறது. வரும் 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், பூ எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளில் சுவாமிக்கு மகா அபிேஷகம், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.