மேலும் செய்திகள்
அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா
25-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், முத்துார் ஸ்ரீ நவா கல்வியியல் கல்லுாரியில் பி.எட். முதலாமாண்டு மாணவியருக்கான வரவேற்பு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் சண்முகம் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி செயலாளர் சக்திவேல், செயல் இயக்குநர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் தீபா வரவேற்றார். சென்ட்வின் கல்வியியல் கல்லுாரியின் முதல்வர் ராஜ்மோகன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மொரட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசண்முகம் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. முதலாமாண்டு மாணவியரின் பெற்றோர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி மாணவியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லுாரி தமிழ்துறை உதவி பேராசிரியர் சியாமளா நன்றி கூறினார்.
25-Oct-2025