பணியின் போது விபத்து வெல்டிங் தொழிலாளி பலி
தாராபுரம்:தாராபுரம், காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், 45, வெல்டிங் தொழிலாளி. தாராபுரம் பைபாஸ் சாலையில் லாரி மீது நின்றபடி நேற்று காலை, 9:00 மணியளவில் வெல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதில், துாக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.