உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / என்ன செய்யப் போகிறது மாநகராட்சி?

என்ன செய்யப் போகிறது மாநகராட்சி?

முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம் தொடர்பான வழக்கின் அடிப்படையில் சில வழிகாட்டுதல்களை ஐகோர்ட் வழங்கியிருக்கிறது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள குப்பைக் கொட்டும் இடங்கள் குறித்த விவரங்களை ஐகோர்ட் கேட்க, இளவந்தியம், கள்ளிப்பாளையம், இடுவாய் உள்ளிட்ட சில இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டது. இடுவாயில், மாநகராட்சிக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலத்தில் தற்காலிகமாக குப்பைக்கொட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. குப்பை கொட்டும் இடம் முழுக்க பாலிதீன் விரிப்பு விரித்து, அதன் மீது குப்பை கொட்டி, அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரித்து, சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலாக சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் எனவும் ஐகோர்ட் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இருப்பினும், எந்தவொரு இடத்திலும் குப்பை கொட்ட, அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திடக்கழிவு மேலாண்மை பணியில் அவசர, அவசியம் காட்ட வேண்டிய நிலை மாநகராட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ