சாலை பாதுகாப்பு வார விழா எப்போது?
திருப்பூர்: மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு வாரம், கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.) பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்தின் ஏதேனும், பத்து நாட்கள் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள், ெஹல்மெட் ஊர்வலம், வாகன பேரணி, விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்டவை நடத்தப்படும். அறிவிப்பு இன்னும் வராததால், அதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ள முடியாமல் வட்டார போக்கு வரத்து துறையினர் உள்ளனர். தாமதமின்றி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.