உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எங்கெங்கு நோக்கினும் கண்ணனே நாளை திருப்பூரில் கொண்டாட்டம்

எங்கெங்கு நோக்கினும் கண்ணனே நாளை திருப்பூரில் கொண்டாட்டம்

திருப்பூர்; ஹிந்து அறநிலையத்துறை, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை, 'தினமலர்' நாளிதழ், கவிநயா நாட்டியாலயா, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமங்கள் சார்பில்,ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, நாளை நடக்கிறது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா பூஜை வழிபாடுகள் நடக்கின்றன. நாளை (16ம் தேதி) மாலை, 'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' என்ற விழா நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணிக்கு, இரண்டு வயது குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து, விழாவில் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ