உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசத்தலைவர்கள் யார்? விழிப்புணர்வு அவசியம்

தேசத்தலைவர்கள் யார்? விழிப்புணர்வு அவசியம்

''மாணவ பருவத்திலேயே, ஓட்டுரிமை, தேர்தல் குறித்து தெரிந்துகொள்வதன் மூலம், எதிர்காலத்தில், நம் தேசத்தை உயர்த்தும் சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கமுடியும்'' என்று தேர்தல் கமிஷன் நடத்திய வினாடி - வினா போட்டியில் வென்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவர் ஹர்ஷன் - மாணவி பிரீத்தி ஆகியோர் கூறினர்.வரும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம். இதை முன்னிட்டு, தேர்தல் கமிஷன் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. திருப்பூர், அம்மாபாளையம் ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி மாணவர் ஹர்ஷன் - மாணவி பிரீத்தி, மண்டல அளவில் வெற்றிபெற்று, மாநில அளவிலான வினாடி - வினா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.மாணவர் ஹர்ஷன் - மாணவி பிரீத்தி நம்முடன் பகிர்ந்தவை:ஓட்டுரிமை என்பது மக்களாகிய நம் கையில் உள்ள வலிமையான ஆயுதம். இதன்மூலம், நல்ல அரசியல் தலைவர்களை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும். சிறந்த வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதன்மூலம், நாடு வளர்ச்சி பெறும். நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்வதன்மூலம், உலக அரங்கில் நமது நாடு வல்லரசாக உயரும்.வாக்காளர் தின வினாடி - வினா போட்டியில் பங்கேற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்போன்ற மாணவ பருவத்திலேயே, ஓட்டுரிமை, தேர்தல் குறித்து தெரிந்துகொள்வதன் மூலம், எதிர்காலத்தில், நமது தேசத்தை உயர்த்தும் சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கமுடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ