மேலும் செய்திகள்
கொத்தனார் பலி
19-Oct-2024
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம், ஆலாமரத்துாரை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார், 37; திருமணமாகாத இவர், தாய் பொன்னுத்தாயுடன், 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்ததோடு, அங்கேயே தோட்டத்து சாளையில் வசித்து வந்தார்.அவரது தந்தை, 12 ஆண்டுக்கு முன் இறந்த நிலையில், தம்பி சக்திவேல், மூன்று ஆண்டுக்கு முன் சாலை விபத்திலும், இளைய தம்பி சிவசங்கர் கடந்தாண்டு மின்சாரம் தாக்கியும் இறந்து விட்டனர்.மது பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு தோட்டத்து சாளையிலிருந்து, 100 அடி தொலைவிலுள்ள, மாட்டுக் கொட்டகையில், நண்பர்கள் சிலருடன் மது அருந்தியுள்ளார். சப்தம் கேட்டு, மாட்டுக்கொட்டகைக்கு சென்ற தாயை, வீட்டிற்கு போகுமாறு சிவக்குமார் கூறியுள்ளார்.சிவக்குமார் இரவு வீட்டிற்கு வராததால், காலையில் மாட்டுக்கொட்டகைக்கு சென்ற அவரது தாய், அங்கு அவரை காணாததால், தாராபுரத்தில் உள்ள மகள் திலகவதிக்கு தகவல் கொடுத்தார்.அவர் வந்து பார்த்த போது, மாட்டுக்கொட்டகையில் மது பாட்டில்கள், ரத்த கரை இருந்ததால், குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆய்வு செய்த போது, மாட்டுக்கொட்டகையிலிருந்து, 20 அடி துாரத்தில் உள்ள கிணறு வரை ரத்தக்கறை காணப்பட்டது.தீயணைப்பு துறையினர் உதவியுடன், கிணற்றில் தேடிய போது, தலையில் ஆயுதங்களால் தாக்கிய ரத்த காயத்துடன், சிவக்குமாரின் சடலம் மீட்கப்பட்டது. குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்தனர் என, விசாரித்து வருகின்றனர்.
19-Oct-2024