உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்டசபை தேர்தலில் யாருக்கு ஓட்டு?

சட்டசபை தேர்தலில் யாருக்கு ஓட்டு?

அவிநாசி: அவிநாசி அருகே கணியாம்பூண்டியில் உள்ள தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 25வது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட மாநாடு நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பாலகுமாரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் செயலாளர் உரையும், மாவட்ட பொருளாளர் குமார் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில தலைவர் வெள்ளைசாமி, பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கோவர்த்தனன். துணைத் தலைவர்கள் தாமோதரன், சண்முகசுந்தரம், துணைச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சகிலன் பேசியதாவது: தமிழகத்தில் அரசு கேபிள் நிறுவனம் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை நியமிப்பதாக கூறி ஏற்கனவே தொழில் செய்து வரும் பகுதிகளில் நுழைவதை முழுவதுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். கேபிள் டிவி தொழிலில் தற்போது திருப்பூரில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. கேபிள் டிவி என்பது சுயதொழில்; அரசியல் தலையீட்டை தடுப்பதற்கு கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒன்றிணைந்து யாரை தீர்மானிக்கிறார்களோ அவர் களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை