உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா

திருப்பூர்; அன்னை லோகாம்பாள் 111வது ஜெயந்தி விழாவையொட்டி, உலக சமுதாய சேவா சங்கம் திருப்பூர் மண்டலம், சாமுண்டிபுரம் மன வளக்கலை மன்ற அறக்கட்டளை இணைந்து மனைவி நல வேட்பு விழா நடந்தது. தலைமை மண்டல செயலாளர்பழனிசாமி-சுகந்தி தம்பதியர் தலைமை தாங்கினர். ரேவதி மருத்துவமனை நிறுவனர் ஈஸ்வரமூர்த்தி-ரேவதி தம்பதியினர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் சரவணன், உயர் கலப்பு தவம் நடத்தினார். செல்வராஜ் பேசினார். துணைத்தலைவர் ராஜேந்திரன்-யமுனா தம்பதியர் நன்றி கூறினர். அறக்கட்டளை நிர்வாகி ரவிச்சந்திரன்-ஸ்ரீதேவி; கோவிந்தசாமி -சரோஜினி குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹரி வர்ஷினியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ