உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்காய் விலை மீண்டும் உயரும்? தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேங்காய் விலை மீண்டும் உயரும்? தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், உடுமலை சுற்றுப்பகுதிகளில் தேங்காய் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.தேங்காய் நுகர்வு அதிகரித்து வந்த நிலையில், பெருமளவு உற்பத்தி குறைந்து போனது, இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருந்தது. ஜன., மாத இறுதியில் தேங்காய் வரத்து அதிகரிக்கும், தேவையும் சற்று குறைந்து இதன் விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வார துவக்கத்தில் இவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. கொப்பரை விலை இது வரை இல்லாத வகையில் 152 ரூபாய் என கடுமையாக உயர்ந்தது. இருப்பினும் இந்த விலை உயர்வு வார இறுதியில் 148 முதல் 150 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இதனால் கடந்த வார துவக்கத்தில் 3,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் 3,150 முதல் 3,250 ரூபாய் என்ற அளவில் இருந்தது.இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி முதல் தர தேங்காய் கொப்பரை விலை 170 ரூபாய் என மீண்டும் உயர்ந்தது. இதன் மூலம் நடப்பு வாரம் தேங்காய் எண்ணெய் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் தேங்காய் கிலோ 43 முதல் 55 ரூபாய் வரை காணப்பட்டது. தேங்காய் பருப்பு கிலோ 136 ரூபாய்.நடப்பு வாரம் இவை மேலும் விலை உயரும் எனத் தெரிகிறது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக தேங்காய் ரகங்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.இது ஜன., மாத இறுதியில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை தேங்காய் வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை. இதனால், இதன் விலை மேலும் அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை