உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானாவாரிக்கு கைகொடுக்குமா மழை: எதிர்பார்ப்பில் விவசாயிகள்

மானாவாரிக்கு கைகொடுக்குமா மழை: எதிர்பார்ப்பில் விவசாயிகள்

உடுமலை,; உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாய சாகுபடிக்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகள், ஆதாரமாக உள்ளன.இந்த இரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரியாக மக்காச்சோளம், சோளம், தட்டைப்பயறு, கொத்தமல்லி, கொண்டைக்கடலை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பிட்ட சில பகுதிகளில், கோடை கால மானாவாரி சாகுபடியும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, தீவன தேவைக்காக, சோளம் மற்றும் சில பகுதிகளில், கம்பு விதைக்கின்றனர்.அவ்வகையில், சோளம் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் கோடை மழை கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, கோடை உழவு செய்து, மழை நீரை சேகரிப்பது வழக்கம். அதே போல், மானாவாரி விதைப்பும் மேற்கொள்ளப்படுகிறது.கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில், கோடை மழை பெய்தது; உடுமலை பகுதியில், விரைவில், இம்மழை பெய்து, மானாவாரி சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ