உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளைய தலைமுறையினர் சிற்பத்தொழிலில் தொடர்வார்களா?

இளைய தலைமுறையினர் சிற்பத்தொழிலில் தொடர்வார்களா?

திருமுருகன்பூண்டியில், 125 சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. திருமுருகநாதர் சுவாமி கோவிலை பிரதான அடையாளமாக கொண்ட பூண்டியின் மற்றுமொரு அடையாளம், சிற்பக்கலைக்கூடங்கள் தான்.ஐந்து தலைமுறை கடந்தும், பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் தெய்வங்களின் சிற்பங்கள், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.''பூண்டியில் செதுக்கப்படும் சிற்பங்கள், உயி ரோட்டம் நிறைந்தவையாக இருப்பதே, இந்த பிரபலத்துக்கு காரணம்,'' என்கின்றனர் சிற்பக்கலைஞர்கள் ஐந்து தலைமுறையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வரும் ஸ்தபதி குமாரவேல் கூறியதாவது:இங்கு சிற்ப தொழிலுக்கென, பிரத்யேக இடத்தை, அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். சிற்பம் செதுக்க ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில் இருந்து, கல் எடுத்து வரும் போது, அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே, சிற்ப தொழிலுக்கு கல் எடுத்துச் செல்லும் போது, அதை உறுதிப்படுத்தி, அதற்கென பிரத்யேக அனுமதி சீட்டு வழங்க வேண்டும்.பரம்பரை பரம்பரையாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் உள்ளது. இருப்பினும், தொழிலை மேம்படுத்திக் கொள்ள, வங்கிக்கடன் உள்ளிட்டவை, கடந்த, 40 ஆண்டு களாக வழங்கப்படவில்லை. தற்போது, கடன் வழங்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது. இதன் வாயிலாக, இளைய தலைமுறையினர் இத்தொழிலை தொடர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை