உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பெண் ஒருவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த பிரபாகரன் மனைவி கவுசல்யா, 40; இவர்களுக்கு, 15 ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது. கவுசல்யா நேற்று மாலை 6:45 மணியளவில் திருப்பூர் கலெக்டர் அலுவலக ஸ்டாப்பில், பஸ்சில் வந்து இறங்கியுள்ளார். அலுவலக போர்டிகோ நோக்கி சென்றவர், திடீரென தான் கொண்டு வந்த வாட்டர் கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளித்தார். கதறியவாறே, போர்டிகோ நோக்கி ஓடியுள்ளார். போர்டிகோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தீக்குளித்த பெண், படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்; வீரபாண்டி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தீக்குளித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ