மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை; ஒரே நாளில் 2,491 விண்ணப்பம்
17-Jul-2025
திருப்பூர்; தமிழகம் முழுவதும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க, பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அனைத்து முகாம்களிலும், உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு கவுன்டர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஏராளமான பெண்கள், உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க அரசிடமிருந்து எப்போது அறிவிப்பு வரும் என காத்திருந்தனர். தற்போது, விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளது. அரசு திட்டங்களில் மானியம் பெற்று கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியர் அல்லாத தகுதியுள்ள வேறு பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், தகுதியுள்ளோர், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மட்டுமே, உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், 15ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. நகர, கிராம பகுதிகளில், மக்களின் அருகாமையிலேயே முகாம் நடத்தப்படுகிறது. அரசு உத்தரவுப்படி, இம்முகாம்களில், மகளிர் உரிமை தொகை கோரும் விண்ணப்பங்களை பதிவு செய்ய, நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. விதிமுறை தளர்வால், அனைத்து மாவட்டங்களிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முதல் நாள் முகாமிலேயே, பெண்கள் கூட்டம் அலைமோதியது.குறைந்த அலுவலர்களை கொண்டு, உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், அனைத்து முகாம்களிலும், மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு கவுன்டர்களின் எண்ணிக்கை, பத்து முதல், 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பட்டா மாறுதல், குடிநீர், புதிய மின் இணைப்பு போன்ற இதர விண்ணப்பங்களை விட, இரு மடங்கு கூடுதல் எண்ணிக்கையில், மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது விண்ணப்பிப்போரில், தகுதியானோருக்கு விரைவில் உரிமைத்தொகை வழங்கும் அறிவிப்பு அரசிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17-Jul-2025