உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளி அடித்துக்கொலை; போலீசார் விசாரணை

தொழிலாளி அடித்துக்கொலை; போலீசார் விசாரணை

உடுமலை; உடுமலை அருகே, தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள சின்னவீரம்பட்டியை சேர்ந்தவர், நடராஜ், 52. விவசாய கூலித்தொழிலாளி. அவரது மனைவி, முத்துலட்சுமி. முத்துகிருஷ்னண், முத்துக்குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு நடராஜின் சகோதரர் சிவலிங்கத்தை அழைத்த முத்துலட்சுமி, நடராஜ் பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளார்.அவர் வந்து பார்த்த போது, உடலில் காயங்கள் இருந்ததால், தனது அண்ணன் சாவில் மர்மம் உள்ளதாக, உடுமலை போலீசில் புகார் கொடுத்தார்.இது குறித்து, சந்தேக மரணம் என்ற பிரிவில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறியதாவது: மது போதைக்கு அடிமையான நடராஜ், தினமும் குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.ஒரு வாரத்திற்கு முன்பு, போதையில் தகராறில் ஈடுபட்ட போது, அவரது மனைவி முத்துலட்சுமி, பெரிய மகன் முத்துக்குமார் மற்றும் முத்துலட்சுமியின் உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர்.படுகாயமடைந்த அவரை மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்காமல், வீட்டிலேயே வைத்துள்ளனர். அதற்கு பின், நேற்று முன்தினம் இரவு இறந்துள்ளதாகவும், கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இறந்த நடராஜின் சகோதரர் சிவலிங்கம் கூறினார்.அதன் அடிப்படையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை