உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதையில் தகராறு;  தொழிலாளி கொலை

போதையில் தகராறு;  தொழிலாளி கொலை

அவிநாசி; திருப்பூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியன், 45. இவர் திருப்பூர், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையத்தில் தங்கி பிரின்டிங் வேலை செய்து வந்தார். திருணமாகி, மூன்று மகள்கள் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக தங்கி இருந்தார்.நேற்று காலை அம்மாபாளையத்தில் தனியார் பள்ளி அருகே உள்ள காலியிடத்தில், ரத்த காயத்துடன் பாண்டியன் கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். திருமுருகன்பூண்டி போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இக்கொலை தொடர்பாக, அம்மாபாளையத்தை சேர்ந்த, 15 மற்றும் 17 வயது சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சினிமாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிறுவர்கள், பாண்டியனின் சர்ட் பாக்கெட்டில் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது, அவர் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரத்தில், தலையில் கல்லை போட்டு சென்றனர். இதனால், இருவரையும் பூண்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை