மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
திருப்பூர்; உலக மலையாளிகள் கவுன்சில், திருப்பூர் மண்டல குழு துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூரில் உள்ள, 'தி லாங் ஸ்டோரி' ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், உலக மலையாளிகள் கவுன்சில் இந்தியாவுக்கான தலைவர் பத்மகுமார் நாயர் தலைமை வகித்தார். பொருளாளர் ஷன்னி வீலியத், உலக வர்த்தக போரம் சேர்மன் ராஜேஸ்குமார், இந்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் மேனன், கோவை மண்டல குழு சேர்மன் பிரதீப் நம்பியார், தலைவர் ராஜன் ஆறுமுகம், பொதுசெயலாளர் விஜயன் செருவேசரி, பெண்கள் பிரிவு சேர்மன் ஜெயந்தி பிரதீப் உள்ளிட்டோர் பேசினர். விழாவில், திருப்பூர் மண்டல குழு புதிதாக தோற்றுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வகையில், சேர்மனாக முருகேசன், தலைவராக மோகனன், பொதுசெயலாளராக சச்சிதானந்தன், பொருளாளராக கோபகுமார், துணை தலைவராக தினேஷ், இணை செயலாளராக வினோத் மற்றும் ஆறு செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
16-Sep-2025