மேலும் செய்திகள்
வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை
07-Jun-2025
திருப்பூர்; திருப்பூர் பாண்டுரங்கன் கோவிலில், ஆஷாட ஏகாதசி விழாவையொட்டி, பக்தர்கள் கருவறைக்குள் நேரடியாகச் சென்று வழிபட்டனர்.பக்தன் விட்டல்நாதனுக்காக பகவான் கிருஷ்ணர் பாண்டுரங்கனாக, ருக்மணி தேவியுடன் காட்சி யளித்த நாள் ஆஷாட ஏகாதசி நாள். பெற்றோரை போற்றி வணங்குவதால் நாம் பெறும் நன்மைகள் குறித்து உணர்த்துவதாக இந்த நாள் அமைந்துள்ளது.பாண்டுரங்கன் அவதாரத்தில் கிருஷ்ணர் உள்ள ஸ்தலங்களில் இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.திருப்பூர், ராயபுரம் பகுதியில் உள்ள பாண்டுரங்கன் - ருக்மாயி கோவிலில் ஆஷாட ஏகாதசி விழா நேற்று நடந்தது.அதிகாலை சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் நேரடியாக கருவறைக்குள் சென்று, பாண்டுரங்கன் - ருக்மாயி இருவரையும் வழிபட்டனர்.விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், பஜனை ஆகியன நடந்தது. பக்திச் சொற்பொழிவு நடைபெற்றது. திரளானோர் கலந்து கொண்டனர்.
07-Jun-2025