உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அன்னையை வழிபட்டால் தீய எண்ணங்கள் விலகும்

அன்னையை வழிபட்டால் தீய எண்ணங்கள் விலகும்

பல்லடம்; பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஸ்ரீவாலை பரமேஸ்வரி அம்மன் சித்தர் பீட நிர்வாகி சிவசாமி, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற திருப்பூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயந்தி, இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் சரஸ்வதி கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜையை துவக்கி வைத்து பேசியதாவது: தொழில், விவசாயம் செழிக்கவே இந்த கலச பூஜை, வேள்வி வழிபாடு நடத்தப்படுகிறது. அம்மன் பணி செய்யும் அனைவரும் செவ்வாடை உடுத்தும் போது, அம்மாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். செவ்வாடை உடுத்தும் பக்தர்கள், யாரையும் திட்டக்கூடாது. பொறுமை, அமைதி, பக்தியை கடைபிடிக்க வேண்டும். திக்குத் தெரியாத இடத்திலும் கூட ஓம் சக்தி என்ற மூலமந்திரம் நம்மை காக்கும். இன்று, கஞ்சா உள்ளிட்ட போதை பொருளுக்கு அடிமையாகி இளைஞர்கள் நிதானம் இழக்கின்றனர். என்ன செய்வது என்றே அவர்களுக்கு தெரிவதில்லை. அன்னையின் வழிபாட்டை மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு அதுபோன்ற தீய எண்ணங்கள் வராது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, சிறப்பு கலச வேள்வி பூஜைகளை தொடர்ந்து, கலச தீர்த்தங்களால் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜிக்கப்பட்ட தீர்த்தங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !