உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கபடி அணி இடம்பெற விருப்பமா?

மாவட்ட கபடி அணி இடம்பெற விருப்பமா?

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில், சப் ஜூனியர் சிறுமியர் அணி மற்றும் சீனியர் பெண்கள் மாவட்ட அணித்தேர்வு, வரும், 3ம் தேதி நடக்கிறது.திருப்பூர், காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக வளாக மைதானத்தில் நடக்கும் தேர்வில் பங்கேற்க சீனியர் அணிக்கு வயது வரம்பு இல்லை; 75 கிலோ எடை இருக்க வேண்டும்.சப் ஜூனியர் அணி தேர்வில், 16 வயதுக்கு உட்பட்ட, 2009 மார்ச், 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். கட்டாயம் ஷூ அணிந்து பங்கேற்க வேண்டும். மாவட்ட அணிக்கு தேர்வாகிறவர்கள் மாநில போட்டிக்கு செல்ல பயிற்சி வழங்கப்படும்.மாவட்ட அணித்தேர்வு காலை, 10:00 மணிக்கு துவங்குவதால், ஒரு மணி நேரம் முன்பே வர வேண்டும் என, திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை