உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமுருக நாதர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்

திருமுருக நாதர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்

அனுப்பர்பாளையம் : திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில், உலக நன்மைக்காகவும், தொழில் வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், ஸ்ரீ சதசண்டி யாகம் நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் துவங்கிய யாகம், வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் நடந்தது. மாலை 4:00 மணி முதல், விக்னேஷ்வர பூஜை, வேதிகார்ச்சனை, தேவி மகாத்மிய பாராயண ஹோமம், பட்டு புடவை - சவுபாக்கிய திரவியங்களுடன் சதசண்டி யாகம் நடந்தது. சுவாமிக்கு தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.யாகத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ