உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செ ல்வ மகள் உருவாக்கலாம்

செ ல்வ மகள் உருவாக்கலாம்

பெண் குழந்தைகள் நலம் பேண, தபால்துறை மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்)2015ல் கொண்டு வரப்பட்டது.பத்து ஆண்டுகளாக சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தி, ஏழு இலக்கங்கள் வரை தங்கள் குழந்தைகளுக்கு தபால் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பெற்றோர் உள்ளனர்.திட்டத்தில், பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் தபால் கணக்கை தபால் அலுவலகங்களில் துவங்க வேண்டும்.ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள் தொகை செலுத்த வேண்டும்; ஒரு வேளை தவறினால் வட்டி குறைந்துவிடும். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய், அதிக பட்சமாக, 1.50 லட்சம் வரை டிபாசிட்டாக செலுத்த முடியும்; ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.நேரடியாக சென்றோ, ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணமாகும் வரை இந்த திட்டத்தில் சேமிப்பை தொடரலாம்.செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்கு பிரிவு, 80 சி- இன் கீழ் வருமான வரிவிலக்கைப் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி