மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
04-Mar-2025
திருப்பூர்; வீரபாண்டி, குப்பாண்டம்பாளையத்தில் வீரபாண்டி போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.அப்பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வது குறித்து தெரிந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும் விதமாக டூவீலரில் வந்த நபரிடம் விசாரித்தனர்.பீஹார் மாநிலத்தை சேர்ந்த அஜீத்ராம், 19 என்பதும், சந்திராபுரத்தில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிந்தது. டூவீலரில் இருந்த, 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
04-Mar-2025